169 மில்லியன் நிதி மோசடி: நால்வருக்கு எதிராக குற்றச்சாட்டு!

Friday, August 12th, 2016

ராடா  நிறுவனத்திலிருந்த பொதுமக்களின் 169 மில்லியன் ரூபாய் பணத்தை மோடி செய்தார்கள் என்று நால்வருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (12) சட்டமா அதிபர் முன்வைத்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்குரிய முன்னாள் எம்.பி டிரான் அலஸ், புலிகளின் நிதித் தலைவர் எமில் காந்தன், ராடா நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி மற்றும் வைத்தியர் ஜயந்த டயஸ் சமரசிங்க ஆகியோருக்கு எதிராகவே இந்த நிதி மோசடிக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுப்பதற்காக, ஜனாதிபதி செயலகத்தின் அனுமதியுடன் ராடா நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட மில்லியன் கணக்காண பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தப் பணத்தின் மூலம் எந்தவொரு வீடும் கட்டிக்கொடுக்கப்படவில்லை என்றும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை கொலைச் செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் எமில் காந்தனுக்கு கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தால் ஏற்கெனவே பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

Related posts: