1,667 பேர் எலிக் காய்ச்சலால் பாதிப்பு!
 Monday, August 14th, 2017
        
                    Monday, August 14th, 2017
            
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,667 பேர் எலிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இரத்தினபுரி மாவட்டத்தில் 402 பேரும், காலியில் 210 பேரும், களுத்துறையில் 189 பேரும் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதமே வருடத்தில் அதிகளவான எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
எலிக்காயச்சல் காரணமாக சிறுநீரகம் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு காணப்படுவதால் அது குறித்து மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அணில் ஜாசிங்க, குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொருவரும் தங்களின் வீட்டுச் சூழலை சுத்தமாக வைத்திருப்பதனூடாக எலிக்காய்ச்சலை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு காய்ச்சல் நீடித்தால், உடனடியாக வைத்தியரை நாடி தேவையான சிகிச்சைகளை பெற்றுக் கொள்வது அவசியம் எனவும் டொக்டர் அணில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        