1500 அரச வாகனங்கள் மாயம்! – நிதி அமைச்சர்

கடந்த கால ஆட்சியின் போது பயன்படுத்தப்பட்ட 1500 வாகனங்கள் காணாமல்போயிருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதியாளர்களுடன் நேற்று(11) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சர்களுக்காக கொள்வனவு செய்யப்படவுள்ள வாகனங்களுக்காக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரை மதிப்பீட்டு மூலம் குறிப்பிடப்பட்ட தொகையானது வட்டியுடன் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் வெளிவரும் அறிக்கைகள் பொய் எனவும் குறிப்பிட்ட நிதி அமைச்சர் கடந்த வாரங்களில் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கான நிவாரணஙங்கள் கிடைக்கும் வரை அமைச்சர்களுக்கான வாகனங்கள் கொள்வனவுசெய்யப்படக்கூடாது என பிரதமர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் ‘அஜித்குழு’ !
இலங்கை வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் - விமான நிலையம் சென்று வரவேற்றார் பிரதமர் மஹிந்த ரா...
வடக்கில் பக்கவாத நோய் மருந்துகளுக்கு தட்டுப்பாடு - நரம்பியல் வைத்திய நிபுணர் அதிர்ச்சி தகவல்!
|
|