15.53 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது இலங்கை காப்புறுதி துறை!
Sunday, February 18th, 2018
கடந்த வருட மூன்றாவது காலாண்டு பகுதியில் இலங்கை காப்புறுதி துறையில் 15.53 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது இது 15ஆயிரத்து 862 மில்லியன் ரூபா அதிகரிப்பாகும்.
2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதி வரையிலான காலப்பகுதியில் நீண்டகால காப்புறுதி பொதுவான காப்புறுதி நடவடிக்கைகள் மூலம் 1இலட்சத்து 18 ஆயிரத்து 16மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் 1 இலட்சத்து 2ஆயிரத்து 155 ரூபா பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் நிலை மோசமாகலாம் – எச்சரிக்கை விடும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம்!
உடைந்துபோயுள்ள பொருளாதாரத்தையும் நம்பிக்கையிழந்துள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் கட்டியெழுப்புவதே ...
அரசாங்க நிதி பற்றிய குழு முன்னிலையில் அழைக்கப்பட்ட அதிகாரிகள் சமுகமளிக்காமை தொடர்பில் அரசாங்க நிதி ப...
|
|
|


