15 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்.!

Wednesday, July 20th, 2016

குவைத் நாட்டுக்கு பணிப்பெண்ணாக வேலைவாய்ப்பு பெற்றுச்சென்று அங்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த 15 பெண்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.

தாம் பணிபுரிந்த வீடுகளில் பல்வேறு துன்புறுத்தலுக்கு முகங்கொடுத்த இந்த பெண்கள் குவைத் தூதரகத்தில் தஞ்சமடைந்த நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொண்ட நடவடிக்கையையடுத்து அவர்கள் நாட்டுக்கு மீண்டும் அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பிய இந்த பெண்கள் தமது வீடுகளுக்குச் செல்ல தேவையான வசதிகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: