109 உதவி சுங்கத் திணைக்கள அதிகாரிகள் நியமனம்!

இலங்கை சுங்கத் திணைக்களம் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கட்டியெழுப்பப்படவுள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பகிரங்க போட்டிப் பரீட்சைக்குப் பின்னர் இலங்கை சுங்கத் திணைக்களத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட 109 உதவி சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு நியமனங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது பிரதமர் இந்த விடயங்களைக் குறிப்பி;ட்டார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில்:
48 மணித்தியால சுங்கத் திணைக்களப் பணிகளை 24 மணித்தியாலங்களில் பூர்த்தி செய்வது இதன் நோக்கமாகும். இதற்குத் தேவையான ஸ்கானர் இயந்திரம் எதிர்வரும் மார்ச் மாதம் பொருத்தப்படும். சுங்கத் திணைக்களத்தில் ஊழல் மற்றும் மோசடிகளை நிறுத்த முடியுமென்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தப் போட்டிப் பரீட்சைக்கு 5 ஆயிரம் பேர் தோற்றியிருந்தனர். அவர்கள் மத்தியில் இருந்து 109 பேர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|