10,000 உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு மிலேனியம் புலமைப்பரிசில் திட்டம்!

Monday, October 31st, 2016

ஜனாதிபதி நிதியத்தினால் நிர்வாகிக்கப்படும் மிலேனியம் புலமைப்பரிசில் திட்டத்தின் ஊடாக க.பொ.த உயர்தர வகுப்புகளில் கல்வி கற்கும் 10,000 மாணவர்களுக்கு கற்றலுக்காக புலமைப்பரிசில் நிதி வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி சித்தியடைந்து, 2018 அம் ஆண்டு க.பொ.த  உயர்தர பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றவுள்ள மாணவர்களுக்கு இப் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது. மாதாந்த வருமானம் 10,000க்குக் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த, வேறு அரச புலமைப்பரிசில்களைப் பெறாத மாணவர்களுக்கு இப்புலமைப்பரிசில் இவர்கள் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும்வரை மாதாந்தம் 500ரூபா வீதம் 24 மாதங்களுக்கு வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை தகுதியுள்ள மாணவர்கள் தாம் க.பொ.த சாதாரண தரம் கற்ற பாடசாலை அதிபர்கள் மூலம் நவம்பர் 25ஆம் திகதிவரை சம்பந்தப்பட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்களிடம் ஒப்படைக்கலாம்.

118325_DSC04149

Related posts: