100 ஏக்கர் நிலப்பரப்பில் நண்டு வளர்ப்பு!

Tuesday, November 1st, 2016
அம்பலாந்தொட்ட பிரதேசத்தில் நண்டுகளை வளர்ப்பதற்கான திட்டமொன்றை முன்னெடுப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்காக அம்பலாந்தொட்ட நுணம வாவிக்கு அருகாமையில் 100 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பத்து கோடி ரூபா நிதி வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கான திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் மேலும் அமைச்சர் கூறினார்.

7efb01b8f579e8cc188662a06555d23e_XL

Related posts: