திருடிய மாணவனை சான்றுபெற்ற பாடசாலையில் அனுமதிக்க உத்தரவு!

Saturday, June 25th, 2016

மட்டுவில் பகுதியில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிளை திருடி சவாரி செய்த பாடசாலை மாணவர்கள் மூவரில் பிரதான சந்தேகநபரான மாணவனை அச்சுவேலியில் அமைந்துள்ள அரச சான்றுபெற்ற பாடசாலையில் அனுமதிக்குமாறு வியாழக்கிழமை (23) உத்தரவிட்ட சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், ஏனைய இரு மாணவர்களுக்கும் அறிவுரை வழங்கி பிணையில் விடுவித்தார்.

மாணவர்களின் பெற்றோரை மன்றில் அழைத்து அறிவுரை கூறிய நீதவான், கல்வி நடவடிக்கையில் ஈடுபடுகிறார்களா? என அவதானித்து நல்ல அறிவுரைகளை கூறி வளர்க்கவேண்டும் என தெரிவித்தார்.

மட்டுவில் பகுதியில் உள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மாணவன், புதன்கிழமை (22)  திருடியுள்ளார்.

பின்னர் தனது இரு நண்பர்களையும் ஏற்றி எரிபொருள் தீரும் வரை சவாரி செய்துள்ளதுடன்
இவ்விடயம் சாவகச்சேரி பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து மூவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

Related posts:


வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளொன்று ஆலமரத்துடன் மோதியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மகள் ப...
பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்ய எந்த தீர்மானமும் எடுக்கவில்லை – வெளியாகும் தகவலில் உண்மையில்லை எ...
சகல வெள்ளிக்கிழமைகளிலும் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்க யோசனை - அமைச்சர் தினேஷ் குணவர்தன தகவல்!