சித்திரத்தேருக்கான அச்சு, தென்னாபிரிக்காவிலிருந்து மருதடிக்கு வருகிறது!

Tuesday, May 17th, 2016

மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலயத்தின் சித்திரத் தேருக்கு, தென்னாபிரிக்காவிலிருந்து அச்சு கொண்டு வந்து பொருத்தப்படவுள்ளது.

இந்து கலாசார அமைச்சால் வழங்கப்பட்ட 1 மில்லியன் ரூபாய் நிதியில் இந்த அச்சு, தென்னாபிரிக்காவிலிருந்து கொண்டு வந்து பொருத்தப்படவுள்ளது. ஆலயத்தின் தேர் 150 வருடங்கள் பழமை வாய்ந்ததுடன், தேரினது சில்லின்  அச்சு, மரத்தால் வடிவமைக்கப்பட்டு இருப்பதால், அச்சு சேதமடைந்து தொடர்ந்து பாவிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இது தொடர்பில் ஆலய நிர்வாக சபையினர், மீள்குடியேற்ற மற்றும் இந்துவிவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். அதனையடுத்து, அச்சு கொள்வனவு செய்ய இந்துக் கலாசார அமைச்சால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது

அச்சை கொண்டு வந்து பொருத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் புதிய அச்சு பொருத்தப்படுவதால் தேரின் 4 சில்லுகளையும் புதிதாக போடவேண்டியுள்ளதாக தர்மகத்தா சபையினர்’ தெரிவிக்கின்றனர்.

Related posts: