இந்த வருடத்தில் 66 யானைகள் உயிரிழப்பு!

2019ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதகாலப் பகுதிக்குள் பொலன்னறுவை பிரதேசத்தில் மட்டும் 66 யானைகள் உயிரிழந்துள்ளன.
அத்துடன் அதே பிரதேச எல்லைக்குள் சுமார் 15 மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக வனசீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2016ம் ஆண்டில் 76 யானைகளும், 21 மனித உயிர்களும் பலிகொள்ளப்பட்டிருந்தன. 2017ம் ஆண்டு யானைகளின் உயிரிழப்பு 44 ஆகவும் மனித உயிரிழப்பு 16 ஆகவும் பதிவாகியிருந்தது. 2018ல் 54 யானைகளும் 28 மனித உயிர்களும் இழக்கப்பட்டிருந்தன.
மனிதர்களின் செயற்பாடுகள் காரணமாக யானைகள் அகால மரணத்தை எதிர்கொள்வதாகவும், அதிலும் பெருமளவான யானைகள் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாகவும் வனசீவராசிகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
பாடசாலை செல்லும் தாய்மாருக்கு சலுகை!
கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்!
சீர்திருத்தம் மற்றும் மீள்கட்டமைப்புக்கு இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது - சர்வதேச நாணய நிதியம் த...
|
|