ஹெரோயின் பொதிகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒவ்வொரு நிறத்தில் விற்பனை – CID யினால் கண்டுபிடிப்பு!

Tuesday, September 1st, 2020

இலங்கையில் ஹெரோயின் பக்கட்களை பகிர்வதற்காக புதிய நிற முறை ஒன்று பயன்படுத்தப்படுவதாக குற்ற விசாரணை பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகர்கள், ஹெரோயின் பக்கட்களை நாடு முழுவதும் பகிர்வதற்காக இந்த முறையை பயன்படுத்துகின்றனர்.

குறித்த ஹெரோயின் பக்கட் யாருடையது என்பது தொடர்பில் அடையாளம் காண்பதற்காக நகரத்திற்கு நகரம் பல்வேறு நிறங்கள் பயன்படுத்தி அவற்றினை விற்பனை செய்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதி சொலிஸ்டர் நாயகம் திலீப பீரிஸ், கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவிடம் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் விற்பனை செய்வது தொடர்பில் தற்போது விளக்கமறியலில் உள்ள பொடி லெசி உட்பட போதை பொருள் விற்பனையாளர்கள் தங்கள் ஆதரவாளர்களை ஈடுபடுத்தி குறித்த ஹெரோயின் பக்கட்களுக்கு பல்வேறு நிறம் பயன்படுத்தி நாடு முழுவதும் பகிரப்படுகிறது.

உதாரணமாக அம்பலங்கொட பிரதேசத்திற்கு நீல நிறத்திலான பக்கட், காலி பிரதேச்திற்கு பச்சை நிற பக்கட் பகிரப்படுவதாகவும் பிரதி சொலிஸ்டர் நாயகம் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: