ஹெரோயினுடன் 4 வெளிநாட்டு பிரஜைகள் கைது!

இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஹெரோய்ன் போதைப் பொருளுடன் வெளிநாட்டு பிரஜைகள் 4 பேர் கல்கிஸ்ஸை ரயில் நிலையத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 2 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் கமல் டி சில்வா தெரிவித்துள்ளார்.
நீண்ட நாளாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளினூடாக உறுதிப்படுத்தப்பட்ட தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.மாலைத்தீவைச் சேர்ந்த மூன்று பேரும் பாகிஸ்தான் பிரஜை ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related posts:
தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பொலிஸ் சேவையில் முழுமைக பங்களிக்க வேண்டும் - பிரதி பொலிஸ்மா அதிபர்’ அஜித...
தரம் ஒன்றுமுதல் ஆங்கிலம் கற்பிக்கப்படும் - கல்வி அமைச்சு!
2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பம்!!
|
|