ஹட்ரிக் எடுத்த இரண்டாவது வீரர் ஹேரத்!
Friday, August 5th, 2016
இலங்கையின் சுழல் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் அடுத்தடுத்த 3 பந்துகளில் 3 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார்.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் இடம்பெறும் டெஸ்ட் தொடரின் காலியில் இடம்பெறும் 2 ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று, அவர் குறித்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
அதன் அடிப்படையில், இலங்கை அணி சார்பில் நுவன் சொய்சாவிற்கு அடுத்ததாக டெஸ்ட் போட்டிகளில் ஹட்ரிக் சாதனை படைத்த இரண்டாவது வீரர் இவர் என்பதோடு, சுழல் பந்துவீச்சாளர் வரிசையில் முதலாவது இலங்கையர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
காணாமால் போனோர் அலுவலகம் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது -அமைச்சர் ராஜித சேனாரத்ன!
வாழைப்பழத்தின் விலையில் திடீர் சரிவு
மேலும் ஒரு மில்லியன் சினோபோர்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!
|
|
|


