வைத்தியசாலையில் கடமையில் அமர்த்த பொலிஸாரின் ஆளணி பற்றாக்குறை -பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி!

Friday, March 16th, 2018

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உள்ள பொலிஸ் சாவடியில் பொலிஸாரை கடமையில் அமர்த்துவதற்கு தற்போது ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போது மாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போது பதிலளித்த பொலிஸ் பொறுப்பதிகாரி அண்மையில் ஏற்பட்ட சம்பவம் ஒன்றை அடுத்து அங்கு பொலிஸார் கடமையில் இல்லை.

ஏதாவது சம்பவம் தொடர்பில் தகவல் தந்தால் அங்கு உடனடியாகச் செல்வோம் ஒரு பொலிஸாரை கடமையில் விடுவதில் பாதுகாப்பு பிரச்சினை உள்ளது. ஆளணி கிடைத்ததும் பொலிஸார் கடமையில் அமர்த்தப்படுவர் என்றார்.

Related posts: