வைத்தியசாலைக்குள் வாள்வெட்டு: சந்தேகத்தில் 10பேர் நேற்றிரவு கைது!

பருத்தித்துறை வைத்தியசாலையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நேற்றிரவு 10பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளின் பின்னர் அவர்கள் பற்றிய அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துன்னாலை ஆட்டுப்பட்டித் தெருவில் சீட்டுத் தொடர்பில் இரு குழுவுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் 2பேர் வாள்வெட்டுக்ககு இலக்காகி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வைத்தியசாலைக்குள் புகுந்த கும்பல் வைத்தியசாலைக்குள் வைத்து ஒருவரைத் துரத்திதுரத்தி வாளால் வெட்டியிருந்தது. அதனால் படுகாயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் வரை 3 பேரைக் கைது செய்த பொலிஸார் நீதிமன்றின் உத்தரவில் அவர்களை விளக்கமறியலில் வைத்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டிருந்த நிலையில், துன்னாலையில் நேற்றிரவு 10பேரைக் கைது செய்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் வாள்வெட்டுச் சம்பவத்தில் தொடர்புப்பட்டிருப்பின் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர். தொடர்பில்லையெனின் விடுவிக்கப்படுவர் என்று பொலிஸார் கூறினர்.
Related posts:
|
|