வேலணையில் குளத்தில் மூழ்கி 16 வயதுச் சிறுமி உயிரிழப்பு!
Wednesday, January 11th, 2017
வேலணை மேற்கு சங்கத்தார் கேணிக்குளத்தில் தனது நண்பிகளுடன் குளிக்கச் சென்ற யுவதியொருவர் நீரில் மூழ்கி நேற்று செவ்வாய்க்கிழமை(10)மதியம் உயிரிழந்துள்ளதாக யாழ்.ஊர்காவற்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த குளத்தில் குளித்துக்கொ2ண்டிருந்த அதேயிடத்தை சேர்ந்த16 வயாதான யுவதி ஆழமான பகுதிக்குச் சென்றமையால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த யுவதியின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக ஊர்காவற்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:
மீண்டும் ஊடக குழு உதயம்!
அரச இணையத்தளங்கள் மீது மீண்டும் சைபர் தாக்குதல்!
அனைத்து சவால்களையும் சிறந்த முறையில் வெற்றிகொள்வேன் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|
|


