வெளியில் செல்வது அவதானம்: வடக்கின் மூன்று மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
Saturday, May 5th, 2018
வடமாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்அறிவித்துள்ளது.
இதனால் அங்குள்ள மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றரிலும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல்திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் எதிர்வரும் 7 ஆம் திகதி காலை வரை மழையுடனான காலநிலை சில பகுதிகளில் நீடிக்கும் என அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
அரச ஊழியர்மேலதிக கொடுப்பனவுக்கு திறைசேரி அனுமதி!
யாழ். மாநகர சபை எல்லைக்குள் அனுமதியற்ற குடிநீர் விற்பனை - சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!
சிறுவர்களிடையே பரவும் 3 நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு வைத்தியர்கள் அவசர எச்சரிக்கை!
|
|
|


