வெற்றிலையை மென்றவாறு மீன் விற்றவருக்குத் தண்டம்!
Thursday, February 22nd, 2018
ஊர்காவற்றுறை மீன் சந்தையில் வெற்றிலை மென்றவாறு கடலுணவுகளை விற்பனை செய்த பெண்ணுக்கு 3 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து ஊர்காவற்றுறை நீதிவான் உத்தரவிட்டார்.
ஊர்காவற்றுறை மீன்சந்தையில் வெற்றிலை மென்றவாறு கடலுணவுகளை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவருக்கு எதிராகப் பொது சுகாதாரப் பரிசோதகர் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னணியில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது.
பெண் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரை எச்சரித்த நீதிவான், 3 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து உத்தரவிட்டார்.
Related posts:
கல்வி நிறுவனங்கள் நல்லிணக்கத்தின் கேந்திர நிலையமாக உருவாக்கப்படவேண்டும்!
நல்லூர் ஆலயச் சுற்றாடலில் வீடுகளில் நாய்களை வளர்ப்போர் கட்டிப் பராமரிக்குமாறு அறிவுரை!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட ஆய்வகம்: சுற்றுலாத்துறைசார் ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்ற ஏற்பாடு...
|
|
|


