வெப்பத்தால் பெண் மரணம்!
Tuesday, April 5th, 2016
அண்மைய நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பம் காரணமாக கிளிநொச்சியில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.
கிளிநொச்சி, பூநகரி கறுக்காய்தீவைச் சேர்ந்த 43 வயதான இராஜேஸ்வரன் செந்தமிழ்செல்வி என்பவரே அதிக வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இவர் மயக்கமடைந்த நிலையில் பூநகரி வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை (02) அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைகளை மேற்கொண்ட கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வைத்தியதிகாரி என்.சிவரூபன் தனது வைத்திய அறிக்கையில், உடலில் நீர்த்தன்மை குறைந்தமையால் இந்தப் பெண் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்..
Related posts:
விரைவில் புதிய நீர்ப்பாசனக் கொள்கை – விஜயமுனி சொய்சா!
தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிசிர மென்டிஸ் இராஜினாமா !
தொடரும் காலநிலை சீர்கேட்டின் எதிரொலி - மரக்கறிகளின் விலைகள் பாரியளவில் அதிகரிப்பு - நுகர்வோர் கவலை!
|
|
|


