வெட்டுப் புள்ளிகளை ரவி கருணாநாயக்கவே காரணம் – பந்துல குணவர்தன !

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான வெட்டுப் புள்ளிகளை, முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உயர்த்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளிகள் மிகவும் அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளன.இவ்வாறு வெட்டுப் புள்ளிகள் உயர்த்தப் பட்டமைக்கான பொறுப்பினை முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும், தற்போதைய அரசாங்கமும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட யோசனையில் நான் கல்வி அமைச்சர் என்ற ரீதியில் புலமைப் பரிசில் பரீட்சை கொடுப்பனவு நலன் பெறும் மாணவர் எண்ணிக்கையையும் தொகையையும் அதிகரிப்பதற்கு பரிந்துரை செய்திருந்தேன்.
எனினும், அதன் பின்னர் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட மைத்திரி அரசாங்கம் இந்த யோசனையை அமுல்படுத்துவதற்கு தவறியுள்ளது.இதேவேளை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடையும் மாணவர் தொகையை 15000த்திலிருந்து 25000 ரூபாய் உயர்த்தினால் அதிகளவு மாணவர்கள் நலன் பெற்றுக்கொள்வார்கள் என்றும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|