வீதி விபத்தில் இளைஞன் படுகாயம்!

வீதியால் நடந்து சென்ற இளைஞன் மீது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் நீர்வேலிச்சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் நீர்வேலி தெற்கினை சேர்ந்த சிவலிங்கம் கஜேந்திரன் (வயது 25) என்ற இளைஞனே படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பொலிஸில் முறையீட்டதையடுத்து தொடர்ந்து பொலிஸார்’ விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
யாழ் பல்கலையில் அடுத்த வாரம் முதல் பிசிஆர் சோதனைகள் மீள ஆரம்பம்!
உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள் கொள்வனவுக்காக - இந்தியாவிடம் ஒரு பில்லியன் டொலரை ...
ஏழைப் பிள்ளைகளுக்கு பணமில்லாமல் இலவச சீசன் டிக்கெட்டுகளை - அமைச்சர் பந்துல குணவர்தன நாடாளுமன்றில் அ...
|
|