வீதியோர வியாபாரிகளின் உடைமைகள் பறிமுதல் – நல்லூர் பிரதேச சபை நடவடிக்கை!
Friday, June 8th, 2018
அறிவித்தல் வழங்கப்பட்ட பின்னரும் வீதியோரங்களில் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களின் உடைமைகள் நல்லூர் பிரதேச சபையால் நேற்றுப் பறிமுதல் செய்யப்பட்டன.
நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் வீதியோரங்களில் விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் உடனடியாக அவற்றை நிறுத்த வேண்டும் என்று கடந்த மாதம் பத்திரிகைகள் ஊடாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.
வியாபாரிகளுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் வீதியோர வியாபாரிகளுக்கு எதிராக நேற்று நல்லூர் பிரதேச சபையால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. வீதியோரங்களில் விற்பனை மேற்கொண்டவர்களின் உடைமைகள் பிரதேச சபையினரால் உழவு இயந்திரத்தில் ஏற்றி எடுத்துச் செல்லப்பட்டன.
Related posts:
6ஆண்டுகளின் பின்னர் மருத்துவக் கண்காட்சி
எதிர்வரும் 18ஆம் திகதி பிரதமர் மஹிந்தராஜபக்ச தலைமையில் கட்டுநாயக்க சர்வதேச நிலையத்தில் இரண்டாவது முன...
அமெரிக்க அரசால் வழங்கப்பட்ட அவசர உதவிப்பொருட்கள் இலங்கையை வந்தடைந்தன!
|
|
|


