விஷத்தன்மை கொண்ட அரிசிகள் விற்பனை?
 Thursday, March 23rd, 2017
        
                    Thursday, March 23rd, 2017
            
அரிசி ஆலை உரிமையாளர்கள், கொள்வனவு செய்யும் அரிசியை குறைந்தது ஐந்து ஆண்டுகள் பயன்படுத்துவதற்காகவும், பாதுகாப்பதற்காக விஷத்தன்மையுள்ள இரசாயனங்களை பயன்படுத்துகின்றனர் என பொலன்னறுவை சிறுநீரக நோய் தடுப்பு பிரிவு வைத்தியர் மாலின் மெத்சூரிய தெரிவித்துள்ளார்.
இதனால், குறித்த அரிசியை கொள்வனவு செய்யும் பொது மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகின்றனர் என பொலன்னறுவை சிறுநீரக நோய் தடுப்பு பிரிவு வைத்தியர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட விவசாய குழு எச்சரிக்கை கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே வைத்தியர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மாவட்டத்தில் சிறுநீரக நோய் தடுப்பு திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்தியர்,
ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 100 புதிய சிறுநீரக நோயாளிகள் கண்டறிப்படுகின்றனர். சிறுநீரக நோயால் பாதிக்கப்படுபவர்களில், 10 சதவீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என்றும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். சிறுநீரக நோய் தொடர்பில், சிறுநீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போதே சிலரின் குருதி மாதிரிகளில் அல்பியூமின் கண்டுப்பிடிக்கப்பட்டமையால் நோய் உறுத்தியானது என்றும் வைத்தியர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் உணவு பொருட்களை பாதுகாப்பதற்காக அதிக விஷத்தன்மையுள்ள இரசாயனங்கள் பயன்படுத்திவரும் நபர்களை கைது செய்வது தொடர்பிலும், இந்த நிலையை நிலைமையை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வைத்தியர் மாலின் மெத்சூரிய கூறியுள்ளார்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        