விவசாயத்துக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் மாட்டுப் பொங்கல் விழா இன்று.!
Tuesday, January 16th, 2024
தைத் திருநாளின் 2 ஆம் நாளான இன்று விவசாயத்துக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாக மாட்டுப் பொங்கல் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது
மாடுகள குளிப்பாட்டப்பட்டு சந்தனம், குங்குமம் இட்டு மாலைகள் மற்றும் சலங்கைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு விாை எடுக்கப்பட்டது
சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் செய்யப்பட்டு அவற்றுடன் செங்கரும்பு, பழவகைகள் ஆகியவை மாடுகளுக்கு படையலிடப்பட்டு வழிபாடு நடத்தி பின் வழிபாட்டுப் பொருட்கள் மாடுகளுக்கு உணவாக வழங்கப்பட்டன.
மேலும், உழவர் நண்பர்களாக விளங்கும் மாடுகளை குளிப்பாட்டி, சந்தனம், குங்குமம் வைத்து, மலர் மாலை அணிவித்து, மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து விவசாயிகள் அதனை கடவுளாக வழிபட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வண்ணை ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்!
கிராம உத்தியோகத்தர்கள் திணைக்கள அதிகாரிகளின் பாதுகாப்புக்கு பொலிஸ் பாதுகாப்பு – பிரதமர் ஆலோசனை!
இந்திய ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விகரம சிங்க இரங்கல்!
|
|
|


