விலை குறைத்தும் விலை குறையாத மண்ணெண்ணை!
Saturday, November 26th, 2016
வரவு – செலவு திட்டத்தில் மண்ணெண்ணையின் விலை 5ரூபா குறைப்புச் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதும், அது தொடர்பிலான எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வராமையால் மண்ணெண்ணெய் விலைக்குறைப்புச் செய்யப்படமாட்டாது என்று பெற்றோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆண்டுக்குரிய வரவு – செலவு திட்டம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் கடந்த 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதில் மண்ணெண்ணெய் உள்ளிட்ட சில பொருட்கள் விலைக்குறைப்புச் செயப்பட்டிருந்தன. இருப்பினும் இதுவரை மண்ணெண்ணெய் 49ரூபாவிற்கே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. விலைக்குறைப்புச் செய்யப்படவில்லை. மண்ணெண்ணெய் விலைக்குறைப்புத் தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைமையகத்திடம் இருந்து எமக்குக் கிடைக்கவில்லை என்று கூட்டுத்தாபன வடபிராந்திய அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இம்மாதம் 30ஆம் திகதி இதங்கான அறிவிப்பு கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டன.

Related posts:
|
|
|


