விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத வர்த்தகருக்கு தண்டம்!

Tuesday, May 29th, 2018

வர்த்தக நிலையத்தில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமல் ஒரு கிலோ ரவை விற்பனை செய்த வர்த்தகருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் கடந்த புதன்கிழமை 10 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டதெனத் தெரிவிக்கப்பட்டது.

யாழ் மாவட்ட பாவனையாளர்கள் பாதுகாப்பு அதிகார சபை அலுவலர்கள் அண்மையில் பிரதேசத்தில் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத நிலையில் பொருள்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமல் ரவை விற்பனை செய்த வர்த்தகருக்கு 10 ஆயிரம் ரூபாவும், அலைபேசி கவர் விற்பனை செய்த வர்த்தகருக்கு 3 ஆயிரம் ரூபாவும், இறக்குமதியாளரின் விபரம் குறிப்பிடாமல் சோப் விற்பனை செய்த வர்த்தகருக்கு 3 ஆயிரம் ரூபாவும் தண்டம் விதிக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது.

Related posts:


பரீட்சைக்கான திகதிகளில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படமாட்டாது - பாடப் புத்தகங்களை வழங்க இந்திய உவி...
உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு கவனம் செலுத்தப்பட வேண்டிய மட்டத்தில் உள்ளது - வளிமண்டலவியல் திணை...
சந்தையில் நிலவும் கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலைக்கு விற்பனையாகும் அரிசி விற்பனை - விவசாய அமை...