விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை!
Wednesday, March 16th, 2016
வட மாகாணத்திலுள்ள சிகை அலங்கரிப்பு நிலையங்களில், சிகை, தாடி மற்றும் மீசை அலங்காரம் செய்வதற்கான விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படவேண்டும்’ என சிகையலங்கார சங்கத்தின் வடமாகாண சமாச தலைவர் க.நாகராசா தெரிவித்துள்ளார்.
மேலும், விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத சிகையலங்கார நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிகையலங்கார நிலையங்களில் பாவிக்கப்படும் பொருட்களின் காலாவதி திகதிகள் பற்றி, சிகையலங்கார உரிமையாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு காலாவதியான பொருட்களை வைத்திருப்பவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ் நீதிமன்றில் பணம் திருடியவர் கைது!
அரசியல்வாதிகள் தொடர்பான மக்களுக்கு இல்லாது போயுள்ள நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் - தே...
தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளான அனைத்துலக தொழிலாளர் தினம் இன்று!
|
|
|


