விரைவில் வடக்கு கல்வி அமைச்சிலுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு போட்டிப் பரீட்சை!

Thursday, November 30th, 2017

வடக்கு மாகாண கல்வி, விளையாட்டு, கலாசாரத் திணைக்களங்களில் காணப்படும் உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்குப் போட்டிப் பரீட்சை நடத்தப்படவுள்ளது.

மாகாண கல்வி அமைச்சின் 56 ஆவது அமைச்சரவைக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.வடக்கு மாகாணத்தில் கல்வி, விளையாட்டு, கலாசாரம், இளைஞர் விவகாரம் ஆகிய துறைகளை மேம்படுத்துவதற்கு அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. ஆனால் இந்தத் திணைக்களங்களில் அனுமதிக்கப்பட்ட ஆளணியில் வெற்றிடங்கள் காணப்படுவதால் திணைக்களம் சார்ந்த வேலைகள் செய்வது கடினமாகின்றது. இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தற்போது அமைச்சு முன்வந்துள்ளது.

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தில் 5 விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் 3 கலாசார உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இவற்றை நிரப்புவதற்கு மாகாண விளையாட்டு உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர், சேவைப் பிரமாணக் குறிப்புக்கு அமைய போட்டிப் பரீட்சைகள் நடத்தி நேர்முகத் தேர்வு மூலமாக ஆள்ச்சேர்ப்புச் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக வடக்கு மாகாண ஆளுநரின் அனுமதியைப் பெறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்குமாறு அமைச்சர் சபையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: