விரைவில் உள்ளூராட்சிசபை தேர்தல் – அமைச்சர் பைஸர் முஸ்தபா !

Friday, July 1st, 2016

நேற்றுடன் முடிவுற்ற 23 உள்ளூராட்சி சபைகளில் 17 மாநகரசபைகள் மற்றும் ஒரு நகரசபை உட்பட 18 சபைகள் ஒரு விசேட ஆளுநருக்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபையின் அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதேஅவர் இவ்வாறு தெிவித்துள்ளார். அத்துடன் 5 பிரதேச சபைகளின் காலம் முடிவுற்றுள்ள நிலையில், குறித்த பிரதேசசபைகள் பிரதேசசெயலாளரின் கீழ்கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து விரைவில் ஜனாதிபதியுடன் பேசி இறுதியான தீர்வு எடுக்கப்படும் என்றும் தெரிவித்த அமைச்சர் விரைவில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறும் எனவும், உள்ளூராட்சி மன்றங்களின் காலம் நீடிக்கப்படவுமில்லை கலைக்கப்படவுமில்லை என கூறினார். உள்ளூராட்சி எல்லை நிர்ணயங்கள் இன்னும் பூர்த்தியாக்கப்படாதமையினாலேயே தேர்தலுக்கான காலம் நீடிக்கப்படுவதாகவும் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

Related posts: