விபத்து – மூவர் காயம் – சாரதி கைது

பாமஸ்டன் பகுதியிலிருந்து நுவரெலியாவிற்கு சென்ற முச்சக்கரவண்டி ஒன்று ரதல்ல கிளேன்டன் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் மூவர் சிறு காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து 18.04.2016 அன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த முச்சக்கரவண்டி வீதியில் செல்லும் போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதி ஓரத்தில் வேலை செய்து கொண்டிருந்த மூவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
எனினும் சாரதியை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார மேலும் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Related posts:
இலங்கையருக்கு அகதி அந்தஸ்து பறிபோகும் நிலை!
உயர்மட்டத்தில் நிலவுகின்ற ஒத்துழைப்பின்மை குறித்து அதிர்ச்சியடைந்தோம் - தேசிய சமாதான பேரவை!
500 டிப்ளோமா ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம் - அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அறிவிப்பு!
|
|