விபத்தில் காயமடைந்த தபால் ஊழியர் உயிரிழப்பு!
Monday, October 17th, 2016
கச்சேரி கிழக்கு வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த தபால் ஊழியர் நேற்று உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
இச் சம்பவத்தில் சந்தனமாதா லேன் கச்சேரி கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிவகுமாரன் வர்ணேந்திரன் (வயது 50) என்ற நபரே உயிரிழந்தவராவார். கடந்த 08ஆம் திகதி மேற்பn ஊழியர் கடமை முடிந்து முற்பகல் 11 மணியளவில் மதிய உணவுக்காக வீடு சென்ற சமயம் கச்சேரி பிழக்கு வீதியில் துவிச்சக்கர வண்டியில் வீதியைக் கடக்கும் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேற்படி நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்ட விசாரணைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related posts:
|
|
|


