விஞ்ஞான அபிவிருத்தி சங்கத்தின் 72வது வருடாந்த மாநாடு ஆரம்பம்!

Tuesday, December 6th, 2016

இலங்கை விஞ்ஞான அபிவிருத்தி சங்கத்தின் 72வது வருடாந்த மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானது.

கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இந்த மாநாடு நடைபெற்றது. இம்முறை ‘சமூக முன்னேற்றத்துக்காக அனைத்து விடங்களிலுமான ஆராய்ச்சிகள், அபிவிருத்தி மற்றும் பயிற்சி’ எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது.

உள்நாட்டு, சர்வதேச விஞ்ஞானிகள் பலரது பங்கேற்புடன் இந்த மாநாடு இன்று கொழும்பு சற்சிறிபாயவில் நடைபெறவுள்ளது. 07ம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை கொழும்பு பல்கலைக்கழக கல்விப் பீடத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை விஞ்ஞான அபிவிருத்தி சங்கமானது இலங்கை மக்களின் அறிவை மேம்படுத்துவதற்காக 1944ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு செயற்பட்டுவரும் ஒரு நிறுவனமாகும்.நாட்டின் அபிவிருத்திக்கு ஏதுவான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அறிவை முன்நிறுத்தி சங்கத்தின் அனைத்து செயற்தி;ட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

விஞ்ஞான அபிவிருத்தி சங்கத்தின் வருடாந்த அமர்வினூடாக பல்வேறு விடயங்கள் ஊடாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் அனைத்து விஞ்ஞானிகளும் ஒரே மேடையில் தமது ஆராய்ச்சிகளையும் புதிய கண்டுபிடிப்புக்களை முன்வைத்தல், மற்றும் அது தொடர்பான பரந்த கலந்துரையாடலை மேற்கொள்கின்றது.

விஞ்ஞான துறையில் பட்டப்பின் படிப்பு மற்றும் விஞ்ஞானத்தை பிரபலப்படுத்துதல், மேம்படுத்தல் செயற்பாடுகளுக்கு ஊக்கமளித்த வல்லுனர்களுக்கும் பயிலுனர்களுக்கும் விஞ்ஞான விரிவாக்கல் ஊடக போட்டி வெற்றியாளர்களுக்கான கேடயம் ஆகியவை ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, மற்றும் இலங்கை விஞ்ஞான அபிவிருத்தி சங்கத்தின் தலைவி பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரண மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

d57a2ac45de737181fa472919c31ff98_XL

Related posts: