விசர் நாய்க்கடி மருந்துகள் போதியளவு கையிருப்பில் – கிளி.சுகாதாரப் பணிப்பாளர்!
Saturday, February 9th, 2019
சில வாரங்களுக்கு முன்னர் விசர் நாய்க்கடி மருந்துக்கு நாடளாவிய ரீதியில் தட்டுப்பாடு காணப்பட்டபோதும் தற்போது அவை போதுமான அளவு கையிருப்பில் உள்ளன என்று கிளிநொச்சி மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் விசர் நாய்க் கடி மருந்துக்குத் தட்டுப்பாடு காணப்பட்டது. நாடளாவிய ரீதியில் இந்த மருந்து பற்றாக்குறையாகக் காணப்பட்டது.
எனினும் அப்போது எமது மாவட்டத்தில் குறிப்பிட்டளவு மருந்துகள் இருந்தன. தற்போது அந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் எமக்குப் போதியளவு மருந்துகள் கிடைத்துள்ளன. அதனால் எந்தத் தடங்கலும் இன்றி மக்களுக்குச் சேவைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வீதி சட்டங்களை கண்காணிக்க சி.சி.டி.வி. !
அச்சுறுத்தல் இருந்தாலும் பொது மக்கள் சேவை தொடரும் - ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு!
பணம் கொடுத்து போலியான தடுப்பூசியை பெற்று கொள்ள வேண்டாம் – பொதுமக்களிடம் ஔடத கூட்டுத்தாபனம் கோரிக்கை!
|
|
|


