வாழைப்பழத்தின் விலையில் திடீர் சரிவு

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழைப்பழத்தின் விலை திடீரென சரிவடைந்ததால் வாழைச் செய்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலையில் நுகர்வுப் பயன்பாடு குறைந்து காணப்படுவதாலும் செய்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாலும் அவற்றின் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என வாழைச் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக நீர்வேலி வாழைக்குலை விற்பனைச் சந்தைக்கு அதிகளவிலான வாழைக்குலைகள் வந்து சேர்கின்றன. நேற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வாழைக்குலைகள் வந்து சேர்ந்தன. கதலி வாழைப்பழம் கிலோ 30 ரூபா வரை விற்கப்பட்டது. தென் பகுதியில் இருந்து அதிகமாக வியாபாரிகள் சந்தைக்கு வாகனம் மூலம் வருகை தந்து இவற்றைக் குலைகளாக எடுத்துச் செல்கின்றனர். வாழைப்பழத்தின் திடீர் விலை வீழ்ச்சியால் செய்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
Related posts:
இலங்கை வரலாற்றில் அதிகூடிய வெப்பநிலை தற்போது காணப்படுகின்றது! வானிலை அவதான நிலையம்
யாழ். நவீன சந்தைக் கட்டடத் தொகுதி வர்த்தக நிலைய கொத்தணியிலிருந்து மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று!
அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவி கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர...
|
|