வாள்வெட்டுடன் தொடர்புடைய ஐவர் கைது!

Monday, January 30th, 2017

யாழ்ப்பாண பொலிஸாரால், யாழ்ப்பாண நகர்ப்பகுதியில் வைத்து வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 பேர், 6 வாள்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்களுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், அரியாலை, கல்வியங்காடு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 5 பேரும் அண்மையில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகளின் பின்னர் குறித்த 5 சந்தேகநபர்களையும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

eccbc87e4b5ce2fe28308fd9f2a7baf3_1484614672-b

Related posts: