வாள்வெட்டுக் கும்பலினைச் சேர்ந்த மூவருக்கு விளக்கமறியல்

யாழ்.மானிப்பாய்ப் பொலிஸாரினால் கைதாகி சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட வாள்வெட்டுக் கும்பலினைச் சேர்ந்த மூவரையும் 14நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.யூட்சன் நேற்று உத்தரவிட்டார்.
சுன்னாகம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் நிலையத்திற்கு விசேட கடமைக்கு வந்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை வாளினால் வெட்டிய பாரதூரமான குற்றச்செயல்களுடன் மேற்படி நபர்கள் ஈடுபட்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் இருவர் நவாலி மானிப்பாய் பகுதியினை சேர்ந்தவர்கள் என்றும் மற்றையநபர் உடுவில் நாமகள் பகுதியினை சேர்ந்தவர் என தெரிவித்த பொலிஸார் அவர்களிடம் இருந்து வாள் ஒன்றினையும் கைபெற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் மூவரையும் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்திய போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|