வானிலை மாற்றங்களால் விஷத்தன்மை – ஐ.நா எச்சரிக்கை
Thursday, May 26th, 2016
தீவிர வானிலை மாற்றங்களால் பல பயிர்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு விஷத்தன்மை கொண்டாதாக மாறி வரும் நிலை அதிகரித்து வருவதாக ஐ.நா எச்சரித்துள்ளது.
வறட்சி மற்றும் அதிகப்படியான வெப்ப நிலை ரசாயன கலவைகளின் குவிப்புக்கு வழிவகை செய்கிறது என வெளிப்படுத்திய ஆய்வு ஒன்றை சுட்டிக்காட்டி ஒரு புதிய அறிக்கையை ஐ.நா வெளியிட்டிருக்கிறது.
குறிப்பாக கோதுமை, சிறு தானியம், சோளம் ஆகிய பயிர்கள், பொதுவாக உரங்களில் பயன் படுத்தப்படும் ஆபத்துக்களை விளைவிக்கக்கூடிய நைட்ரேட்டுகள் அதிகரிப்பதால் பாதிப்புக்குள்ளாகக் கூடிய நிலையில் உள்ளன.
அதிகப்படியான மழையால் தாவரங்களில் ஹைட்ரோஜன் சயனைட் உயரும் நிலையும் ஏற்படலாம்.
இது குறித்து ஐ.நா மேலும் தெரிவிக்கையில், உளகளவில் 70சதவீத விவசாய உற்பத்தி பாதிப்பிற்கு உள்ளாவதோடு நான்கரை பில்லியன் மக்கள் இந்த விஷத்தன்மை ஆபத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனை: பரிசோதிக்கப்பட்ட 17 பேருக்கும் தொற்று இல்லை!
ஐநாவின் 46/1 தீர்மானத்தால் நிறுவப்பட்ட வெளிப்புற முயற்சிகளுக்கான முன்மொழிவை நிராகரித்தது இலங்கை – பத...
சீ தமிழ் சரிகமப பாடல் போட்டியின் இறுதிப்போட்டியில் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷாவுக்கு...
|
|
|


