வாகன விபத்து குறித்து கிரிக்கட் சபை இரங்கல்!

Tuesday, September 20th, 2016

நேற்றையதினம் கிரிக்கெட் வீரர் நுவன் குலசேகரவின் வாகனத்திற்கு மோதுண்டு உயிரிழந்த இளைஞனின் உறவினர்களுக்கு தமது அனுதாபத்தினையும்,துக்கத்தினையும்  தெரிவிப்பதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

நுவன் குலசேகர கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி வரும் வழியிலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

எதிர்ப்பக்கத்தில் வந்த மோட்டார் சைக்கில் பேருந்தினை முந்தியவாறு முன்னோக்கி செல்ல முயன்றபோது வேகத்தை கட்டுப்படுத்த முடியாது போகவே நுவன் குலசேகரவின் வாகனத்தில் மோதியதாகவும் கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிசாரினால் கைது செய்யப்பட நுவன் குலசேகர, நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Nuwan-Kulasekera-Press-Release

Related posts: