வாகன அபராதம் செலுத்த புதிய முறை அமுல்!

நாட்டில் வாகன அபராதத்தை மின்னணு முறையில் செலுத்துதல் மற்றும் ஓட்டுனர்களுக்கான புள்ளிகளை வழங்கும் முறையை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
புள்ளிகள் வழங்கும் முறையை செயல்படுத்த சட்டங்கள் மற்றும் தரவு அமைப்புகள் இருக்கின்ற போதிலும் அதற்காக உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், வீதிகளில் யாசகம் எடுப்பதை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
பரீட்சைக்கு முன்பதாகவே வெளியாகும் விடயங்கள் - முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா!
இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவது தடை - பிரதமரினால் முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!
இலங்கை இயல்பு நிலைக்கு வருவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க...
|
|