வவுனியாவில் குடும்பமொன்றை சந்தித்து சென்ற பெண்ணுக்கு கொரோனா !

Tuesday, October 6th, 2020

வவுனியா – தோணிக்கல் ஆலடிப்பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றினை அண்மையில் சந்தித்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து குறித்த குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆலடிப்பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றினை அண்மையில் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணொருவர் சந்தித்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அவர் வவுனியாவில் சந்தித்த குடும்பத்தினர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த பகுதிக்கு மக்களை செல்ல வேண்டாம் என பொலிஸார் அவசர அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

தோணிக்கல் ஆலடிப்பகுதியில் புகையிரத கடவைக்கு அருகாமையில் சிறிய கடையொன்றினை நடத்தி வரும் குடும்பமொன்றே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனையும் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


சம்பந்தனை கொலை செய்ய 25 மில்லியனில் கூலிப்படை: பொலிஸ்மா அதிபரிடம் வடக்கு முதல்வர் முறையீடு!
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில் வெளியாகும் - வெளிவிவகார ...
தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது, இலங்கையின் சுற்றுலாத்துறையை பாதிக்கும் - சுற்றுலா முகவர் நி...