வல்லப்பட்டைகளுடன் இரண்டு இந்திர்க்ள் கைது!

ஒரு தொகை வல்லப்பட்டைகளுடன் இரண்டு இந்தியப் பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
யூ.எல். 121 என்ற விமானத்தில் இந்தியாவின் சென்னை நோக்கி புறப்படுவதற்காக வந்திருந்த இந்தியப் பிரஜைகள் இரண்டு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக விமான நிலைய சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் தர்மசேன கஹந்தவ கூறினார்.
அவர்களின் பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிலோ கிராம் வல்லப்பட்டைகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி சுமார் 20 இலட்சம் ரூபா என்று சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் தர்மசேன கஹந்தவ கூறினார்.
கைப்பற்றப்பட்ட வல்லப்பட்டைகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட இருவரிடமும் தண்டம் அறவிடப்பட உள்ளது.
Related posts:
அடுத்த சில வாரங்க மிகவும் முக்கியமானவை - கொரோனா நிலைமை தொடர்பில் நிபுணர் சமித் கினிகே எச்சரிக்கை!
விவசாய துறையின் அனைத்து நிதி திட்டங்களுக்கும் அங்கீகாரம் - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை ஜூன் மாதத்தில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் - நிதி ராஜாங்க அ...
|
|