வலி.தெற்கு பிரதேச சபையில் ஆதன வரி செலுத்த கோரிக்கை!
Thursday, November 17th, 2016
ஆதன வரிகளை இதுவரை செலுத்தாத வலிகாமம் தெற்கு பிரதேச சபை பிரிவுகளைச் சேர்;ந்த பொதுமக்களை எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் அவற்றைச் செலுத்துமாறு பிரதேச சபை செயலாளர் கேட்டுள்ளார்.
மக்களால் செலுத்தப்படும் இந்த வரி, வருமானத்தில் இலவச ஆயுர்வேத சேவை, நூலக சேவை, வீதிப் புனரமைப்பு மற்றும் திண்மக் கழிவகற்றல் போன்ற சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன என மேலும் அவர் தெரிவித்தார். உரிய காலத்தில் ஆதன வரிகளைச் செலுத்தும் பிரதேசங்களுக்கு 2017ஆம் ஆண்டு வீதிப் புனரமைப்பு போன்ற நடவடிக்கைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என சபையின் செயலாளர் அறிவித்துள்ளார்.

Related posts:
முறைசாராக் கல்விப்பிரிவு தொழிற்பயிற்சி ஆரம்பம்!
தேர்தல் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கு வன்னி பிரதேசவாசிகளுக்கு கால அவகாசம் - தேர்தல் ஆணைக்குழு ...
அரச வங்கிகள் தேசிய வளங்களாக பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்கிறது - பிரதம...
|
|
|


