வலி.தென்மேற்குப் பிரதேசத்தி ஒரு வாரத்தில் 32பேருக்கு டெங்கு!
Wednesday, December 7th, 2016
பருவ மழையைத் தொடர்ந்து வலி.தென்மேற்குப் பிரதேசத்தில் ஒரு வாரத்தில் மட்டும் 32பேர் டெங்குத் தொற்றுக்குள்ளாகி யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவயவருகின்றது.
வலி.தென்மேற்கு பிரதேசத்தில் ஆனைக்கோட்டை, உயர்ப்புலம், மானிப்பாய், சாவல்கட்டு ஆகிய இடங்களில் டெங்கு தொற்றுக்குள்ளானோர் இனங்காணப்பட்டமையைத் தொடர்ந்து சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் சென்ற பொலிஸ் கிராம அலுவலர், சுகாதாரப் பரிசோதகர் ஆகியோர் இணைந்து வீடு வீடாகச் சென்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பரப்புரையில் ஈடுபட்டனர். டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்த புகையூட்டல் போன்ற தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Related posts:
குமரபுரம் படுகொலை! இன்று மேலும் 10 பேர் சாட்சியம்!
அமைச்சரவை அனுமதியுடன் காணி ஆணையாளர் பணி நீக்கம்!
மும்மொழிக் கற்கை நிலையத்தின் சிங்கள, தமிழ் ஆங்கிலக் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்
|
|
|


