வலி. கிழக்கில் வழிப்பறித் திருடர்களின் தொல்லை அதிகரிப்பு!
Wednesday, August 10th, 2016
வலி. கிழக்குப் பிரதேசத்தில் வழிப்பறித் திருடர்களின் தொல்லை மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக நீர்வேலி, கோப்பாய், இருபாலை, சிறுப்பிட்டி ஆகிய பகுதிகளில் வழிப்பறித் திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையால் பொதுமக்கள் பாதிப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
பட்டப் பகல் வேளையில் ஆட்கள் நடமாட்டம் குறைந்த வீதிகளில் மோட்டார்ச் சைக்கிள்களில் வரும் திருடர்கள் பெண்கள் அணிந்து செல்லும் தங்க நகைகளை அறுத்துக் கொண்டு செல்வதாகவும், எனவே, குறித்த பகுதிகளில் இடம்பெறும் வழிப் பறித் திருட்டுக்களைத் தடுக்கக் கோப்பாய்ப் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதும் மக்களின் கோரிக்கையாகவுள்ளது.
Related posts:
போராட்டத்திற்கு தயாராகும் தொழிற்சங்கங்கள்!
தேர்தலுக்கான பண விவகாரத்தில் தலையிடுங்கள் - சபாநாயகருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்!
சிவில் பாதுகாப்பு திணைக்களம் எந்தவகையிலும் கலைக்கப்படாது - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி!
|
|
|


