வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்கள் பார்வைக்கு!

Thursday, December 8th, 2016

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்கப் பிரதேச சபைகள் சட்டத்தின் 168 ஆம் பிரிவிற்கிணங்க வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு நேற்று 07-12-2016 முதல் எதிர்வரும் 16-12-2016 வரை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டத்தை வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்திலும், சுன்னாகம், உடுவில், ஏழாலை உப அலுவலகங்களிலும் அலுவலக நேரத்தில் பார்வையிட முடியும் என வலி. தெற்குப் பிரதேச சபையின் செயலாளர் ரி.சுதர்சன் தெரிவித்துள்ளார்.

unnamed (1)

Related posts: