வற் வரி அதிகரிப்பு குறித்த சட்டம் வாபஸ் பெறப்பட்டது!

Wednesday, August 24th, 2016

அரசாங்கத்தினால் வற் வரி அதிகரிப்பு குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சட்டத்தை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று குறித்த வற் வரி அதிகரிப்பு குறித்த சட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அவைத் தலைவர் லக்ஷ்மன் கிரியல்ல அறிவித்துள்ளார்.

இந்த சட்டம் எதிர்வரும் நாட்களில் விவாதம் செய்வதற்காக நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருந்தது.உச்ச நீதிமன்றில் ரத்து செய்யப்பட்ட சட்டமொன்று நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் எவ்வாறு உள்ளடக்கப்பட முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன கேள்வி எழுப்பியிருந்தார். இதன்போது குறித்த சட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அவைத் தலைவர் அறிவித்துள்ளார்.

Related posts: