வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயம் சென்ற பக்தர்களுக்கு ஏற்பட்ட அவலம்!
Tuesday, May 29th, 2018
வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு சென்ற பக்தர்களின் வாகனத்தை, மோட்டார் சைக்கிளில் வந்த குழுவொன்று இடைமறித்து அவர்களின் தங்க நகைகளை அபகரித்து சென்றுள்ளனர்.
எனினும் தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் குறித்த மோட்டார் சைக்கிளில் வந்த குழுவைச் சேர்ந்த இருவரை மடக்கிபிடித்துள்ளனர்.
அத்துடன், தர்மபுரம் பொலிஸாரிடம் குறித்த இருவரும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகள் தர்மபுரம் பொலிஸாரால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இடம்பெயர்வு தொடர்பாக தேசிய கொள்கை!
இலங்கையில் கொரோனா தொற்றினால் 30ஆவது மரணம் பதிவானது!
சதோசவில் ரூ.15 விற்கும் முகக்கவசம் - ஒரு ருபாய் மஹபொல நிதியத்திற்கு – அமைச்சர் பந்துல குணவர்த்தன!
|
|
|


