வறட்சியின் எதிரொலி:  கண்ணீர் விட்டு அழும் விவசாயிகள்!

Thursday, January 19th, 2017

நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக விவசாயிகள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். தமது நெற்பயிர்களைக் காப்பாற்ற முடியாத நிலையில் அவர்கள் கண்ணீர் விட்டு அழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது மழை பெய்யாத நிலையில் குளங்களில் உள்ள நீரும் வற்றிய நிலையில் காணப்படுகின்றது. இதனால் விவசாயிகள் தமது நெற்பயிர்களுக்கு போதிய நீரின்மைமயால் பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

சில தாழ்வான பிரதேசங்களில் வரட்சியை ஈடு செய்யக்கூடிய வகையில் ஓரளவு நீர் உள்ள போதும் பல ஏக்கர் கணக்கில் விவசாயத்தை மேற்கொண்டுள்ள விவசாயிகள் நீரின்றி தமது நெற்பயிர்கள் வரட்சியனால் கருகுவதால் பெருங் கவலையடைந்துள்ளனர்.

பயிர்கள் அழிவடைவதை பார்த்துத் தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் அதிளவான விவசாயிகள் தமது விவசாய நிலங்களுக்கு செல்வதில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளனர். பண வசதி உள்ள சில விவசாயிகள் குழாய்க்கிணறுகள் மூலம் நீரை நெற்பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.

குழாய்க்கிணறு அமைப்பதற்கு ஒரு லட்சம் ரூபா முதல் ஒன்றரை லட்சம் ரூபா வரை செலவாகின்றது. எல்லா விவசாயிகளினாலும் தமது விவசாய நிலங்களில் குழாய்க்கிணறை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது வங்கிகளில் கடனைப் பெற்று நகைகளையும் வீட்டுப் பத்திரங்களையும் அடகு வைத்து பணத்தை பெற்று மேற்கொள்ளப்பட்டுள்ள குறித்த பயிர்ச்செய்கை வரட்சியானால் அழிவடைவதைப் பார்த்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பட்டினிச்சாவை எதிர்நோக்கவுள்ள தமக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்

Tamil_Daily_News_3626934289933

Related posts: