வறட்சியினால் பாதிப்பில்லை – விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்!
Tuesday, February 14th, 2017
வறட்சிக் கால நிலை காரணமாக பயிர் நிலங்களுக்கு பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மகாவலி வலயத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பயிர்ச் செய்கைக்கு பாதிப்பும் ஏற்படவில்லை விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரொஹான் விஜேகோன் தெரிவித்துள்ளார்.
பெரும்போகத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பயிர் நிலங்களில்இம்முறை 4 இலட்சத்து 91 ஆயிரம்ஹெக்டயர் நிலப்பரப்பில் மாத்திரமே பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டதாகம் விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரொஹான் விஜேகோன் தெரிவித்துள்ளார்.
8 இலட்சம் ஹெக்டயருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் பயிர்ச் செய்கை மேற்கொள்ள எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதேபோல் பெரும்போகத்தில் 13 இலட்சம் மெற்றிக் தொன் நெல் அறுவடை எதிர்பார்க்கப்பட்டது வறட்சிக் காலநிலை இல்லாமல் இருந்திருந்தால் 17 இலட்சம் மெற்றிக் தொன் நெல்லைஅறுவடை செய்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts:
|
|
|


